தன் பிறந்தநாளுக்கு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் – ஆடியோவை பகிர்ந்து புகழ் பதிவிட்ட பதிவு. (என்ன சொல்லியுள்ளார் பாருங்க)

0
209
rajinikanth
- Advertisement -

தன்னுடைய பிறந்தநாளுக்கு ரஜினி வாழ்த்து சொன்ன ஆடியோ பதிவை பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார் புகழ். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்தது. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வந்த கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

அதிலும் இந்த நிகழ்ச்சியில் புகழக்கென்று ஒரு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே துவங்கியது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னரே இவர் KPY சிரிச்சா போச்சு போன்ற பல நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பல்வேரு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இதையும் பாருங்க : பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்த நடிகையா இது ? இப்போ என்ன செய்றார் தெரியுமா ?

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வரும் புகழுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து சொன்ன அந்த ஆடியோ பதிவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிட்டுள்ளதாவது ‘ என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. என் தலைவன் வாழ்த்துக்களோட இந்த நாள நான் தொடங்கறேன்.

Image

திரை உலகிற்கு வருவதற்கே அவர் ஒரு ரோல் மாடல் எனக்கு. அப்படி அவர பார்த்து ரசிச்சு வளர்ந்த எனக்கு அவர் வாயால வாழ்த்து சொல்லி இருக்கிற மகிழ்ச்சிய எப்படி வெளிப்படுதறதுனு தெரியல. இப்படி ஒருநாள் என் வாழ்க்கைல வரும் னு நான் கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்லை. நான் எந்த இடத்துக்கு போனாலும், அவருக்கு இருக்கிற ரசிகர்கள்ல நானும் ஒருத்தன் அது தான் எனக்கு பெருமை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அன்பும், நன்றிகளும் மக்களே என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement