சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. தற்போது வரை இந்தியாவில் கொரோனாவினால் 3374 பேர் பாதிக்கப்பட்டும், 77 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இந்தியா பெருமளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் நிலையில் உள்ளது. இதற்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் சமீபத்தில் பிரதமருக்கு கொரோனா பாதிப்பிற்கு ஆலோசனை ஒன்றை ஒரு கடிதம் ஒன்று எழுதி இருந்தது பெரும் வைரலாக பேசபட்டது.

இதையும் பாருங்க : விஜய்யை சந்திக்க மூன்று ஆண்டுகளாக சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய சிறுவன். வைரலாகும் புகைப்படம்.

அதில் அந்த மாணவன் கொரோனாவினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினை தீர்க்க அனைத்து மத டிரஸ்ட்கள் வைத்திருக்கும் பணத்தில் 80 சதவீதத்தை அரசு பயன்படுத்திக் கொண்டாலே இந்த பொருளாதாரம் பிரச்சனை தீர்ந்து இந்தியா இறுதியில் முன்னேற்றம் அடைந்து விடும் என்று யோசனை தெரிவித்து இருந்தார்.

Advertisement

இந்நிலையில் உத்தரபிரதேச மாணவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாக்யராஜ் அவர்கள் கூறியிருப்பது, இந்த மாணவரின் ஐடியாவை செயல்படுத்துங்கள். பிரதமர் மோடிக்கு தென் இந்திய எழுத்தாளர் சங்கத்தில் இருந்து நான் கடிதம் எழுதி கோரிக்கை வைத்து உள்ளேன்.

Advertisement

நீங்களும் இதே போல் இந்த விஷயத்தை பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும். மனிதனுக்கு ஏற்றமோ தாழ்வோ வரும் போது இதுவும் கடந்து போகும் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். எந்த சூழ்நிலை பிரச்சினையும், கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருந்தாலும் அது போலவே விரைவில் கடந்து போகும். அனைவரும் தனித்து இருக்க வேண்டும்.

மக்கள் அரசாங்கம் சொல்லும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். அதேசமயம் நோயை எண்ணிப் பயந்து விடக்கூடாது. கொரோனா வைரஸ் தொற்று பற்றி அரசாங்கம், அரசியல்வாதிகள், வி ஐ பி க்கள்,பிரபலங்கள் என எல்லோருமே விழிப்புணர்வு வீடியோவை திரும்பத்திரும்பச் சொல்வதற்கு காரணம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், யாரும் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காகத் தான்.

உதவி செய்வதிலேயே பெரிய உதவி பிரதிபலன் பாராது செய்யும் உதவி தான். தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எங்களின் எழுத்தாளர் சங்கம் சார்பில் தலா 50 ஆயிரம் நிவாரண நிதி அனுப்பப்படுகிறது. அதே போல் நமக்காக காவல்துறையினர், டாக்டர், நர்சுகள், அரசாங்க அதிகாரிகள் என பல அதிகாரிகள் சேவை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement