விஜய்யை சந்திக்க மூன்று ஆண்டுகளாக சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய சிறுவன். வைரலாகும் புகைப்படம்.

0
4379
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். திரையரங்களில் தளபதி விஜய் படம் வருகிறது என்றாலே போதும் திருவிழா போன்று ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து உளர். மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். தளபதி விஜய்யை பார்ப்பதற்கு என்று பலபேர் ஏங்கிக் கிடக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் சிறுவன் ஒருவன் தளபதி விஜய்யை பார்ப்பதற்கு சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகரைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார் – ஜோதிமணி தம்பதி. இவர்களுடைய மகன் உபநிசாந்த். தற்போது இந்த சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

- Advertisement -

இந்த சிறுவன் நீச்சல் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவர். உபநிசாந்த் சிறுவன் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடந்த நீச்சல் போட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கலந்து கொண்டு உள்ளான். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து முதல் பரிசு பெற்றிருக்கிறார். இந்த சிறுவன் முதல் பரிசாக கடந்த மூன்று ஆண்டுகளாக 3,000 ரூபாயை பரிசுத்தொகையாக பெற்று உள்ளான்.

சிறுவன் உபநிசாந்த்

-விளம்பரம்-

இந்த நிலையில் உலகமே அச்சத்தின் உச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு சிறுவன் உபநிசாந்த் தான் பரிசாக பெற்று வைத்து இருந்த பணத்தை கொடுத்திருக்கிறான். இது குறித்து அவரது தந்தை கூறியது, எனது பையன் நடிகர் விஜய்யோட தீவிர ரசிகன். `எப்படியாவது விஜய்யைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பான்.

அதற்கு நான் நீ ஏதாவது சாதனை செய்தால் நான் தளபதி விஜய்யை பார்க்க உன்னைக் கூப்பிட்டு கொண்டு போகிறேன் என்று சொல்லி இருந்தேன். அப்படி அவரைப் பார்க்கப் போக வேண்டும் என்றால் காசு வேண்டும் என்றும் சொன்னேன். உடனே அவன் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு அதில் கிடைத்த பணத்தை தளபதி விஜயை பார்க்க பத்திரமாக சேர்த்து வைத்து இருந்தான்.

ஆனால், தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அந்தப் பணத்தை எடுத்து முதலமைச்சர் நிதி உதவிக்காக கொடுத்தான். என் மகனை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார். சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரை இந்தியாவில் கொரோனாவினால் 3374 பேர் பாதிக்கப்பட்டும், 77 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement