அட, கண்ணம்மாவின் மாமியாருக்கு இவ்ளோ பெரிய மகனா – முதல் முறையாக அவரே வெளியிட்ட வீடியோ.

0
1194
- Advertisement -

சமீபகாலமாகவே மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வாக சின்னத்திரை தொடர்கள் அமைந்துள்ளது. அதிலும் இந்த கொரோனா லாக் டவுனில் இருந்து அனைவரும் சின்னத்திரை சீரியலை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியும் பல சூப்பர் ஹிட் தொடர்களை கொடுத்து வருகிறது.

-விளம்பரம்-

அதிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று தான் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் அருணும், கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோசிணியும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சீரியலில் ஹீரோ, ஹீரோயினுக்கு இணையாக மாமியார் சௌந்தர்யாவின் கதாபாத்திரம் உள்ளது.

- Advertisement -

இந்த சீரியலில் சௌந்தர்யா எனும் கதாபாத்திரத்தில் நடிகை ரூபாஸ்ரீ நடிக்கிறார்கள். இவர்களின் நடிப்பு சீரியலில் வேற லெவல் என்று சொல்லலாம். நடிகை ரூபா ஸ்ரீ அவர்கள் 90 காலகட்டங்களில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். 1992 ஆம் ஆண்டு கள்ளனும் போலீசும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தன்னுடைய 13 வயதிலேயே தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். பிறகு இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும், நடிகை ரூபஸ்ரீ அவர்கள் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

இவர் அடிக்கடி டப்ஸ்மாஷ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறார். இந்த நிலையில் இவர் முதன் முறையாக தனது மகனுடன் இணைந்து செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். இதை பார்த்து ரசிகர்களும் இது உங்கள் மகனா! என்று ஆச்சரியத்தில் கேட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement