பாரதியாராக மாறிய கண்ணம்மா – புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்.

0
1708
roshini
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர்.இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் பாருங்க : அடேய் ஓலா சொம்புஸ், எங்கடா இருக்கீங்க – பாலாஜி பேசிய ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு ஜோ மைக்கேல் அதிரடி.

- Advertisement -

இதற்கெல்லாம் மேலே சென்று சமீபத்தில் தன் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆனால், ஸ்பெஷல் எபிசோட் என்று மூன்று மணிநேரத்தை ஒளிபரப்பு செய்து மூன்று மணி நேரத்தில் எட்டு வருடங்களை கடந்து விட்டது இந்த சீரியல். கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை கண்ணம்மாவின் மாமியாரிடமும் இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்ந்து வருகிறது.

இப்படி சீரியலில் திடீர் திடீர்னு பல்வேறு சர்ப்ரைஸ்களை கொடுத்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் நடித்து வரும் கண்ணம்மா, இந்த சீரியலின் இயக்குனர் பிரவீனுடன் பாரதி வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது நடிகை ரோஷினி, ஏதாவது போட்டோ ஷூட்டிற்காக எடுத்த புகைப்படமா இல்லை சீரியலில் வரப்போகும் காட்சியாக இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement