பாரதி கண்ணம்மா பரீனாவின் Home Tour வீடியோ – அடேங்கப்பா இவ்ளோ பேசிய வீடா.

0
538
farina
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி பரீனா வீட்டின் அழிகிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-
Farina

மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார். மேலும், புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதற்கு முன் பாரதியின் தம்பி அகிலன் விலகி இருந்தார். இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த சில மாதமாகவே சீரியல் கொஞ்சம் டல்லாகவே சென்று கொண்டிருப்பதால் டிஆர்பி ரேட்டிங் குறைந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=Cz2v4EDsBJ4

மகாசங்கம் :

-விளம்பரம்-

இதை சரி செய்யும் விதமாக பாரதி கண்ணம்மா-ராஜா ராணி 2 தொடர் மகாசங்கம் எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த மகா சங்கமம் ஒரு மணிநேரம் நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி2- பாரதி கண்ணம்மா தொடர் இணைந்து உள்ளது. இந்த இரு சீரியலின் இயக்குனரும் பிரவீன் தான். தற்போது சீரியலில் ஹேமா தன்னுடைய பிறந்த நாள் பரிசாக தன்னுடைய அம்மாவை காண்பிக்க வேண்டும் என்று கேட்கிறார்.

சீரியலின் கதை:

அதற்கு பாரதியும் காண்பிக்கிறேன் என்று சத்தியம் செய்து இறந்துபோன தன்னுடைய காதலியின் புகைப்படத்தை காண்பிக்கிறார். இதனால் கோபமடைந்த கண்ணம்மா பாரதியிடம் நான் தான் ஹேமாவின் அம்மா என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறார். பாரதியின் அம்மாவும் உண்மையை சொல்கிறார். இதனால் பாரதி என்ன முடிவெடுக்கப் போகிறார்? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சீரியல் வில்லி பரீனாவின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

பரீனா வீட்டின் வீடியோ:

பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா. இவர் இதற்கு முன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இருந்தாலும், பாரதி கண்ணம்மா சீரியல் தான் பரீனாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. மேலும், இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் அவர் நிறைய வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது பரீனா தன்னுடைய வீட்டின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement