பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை நீச்சல் குளத்தில் கொடுத்த போஸை பாருங்க.

0
3515
sruthi
- Advertisement -

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமரில் தாராளம் காட்டி வருகிறார்கள். சின்னத்திரையிலிருந்து எப்படியாவது வெள்ளித்திரை வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளத்தில் தங்களது புகைப்படத்தை பதிவிட்டு எப்போதும் ரசிகர்கள் தங்கள் முகத்தை மறவாமல் இருக்கும் வண்ணம் முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான சுருதியின் சில ultra-modern புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கி நடித்தும் இருந்தார். இந்த தொடரில் பல பேர் நடித்து இருந்தார்கள். குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டது தான் இந்த தொடர். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுருதி சண்முகப்பிரியா.

- Advertisement -

1993 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த தொடருக்குப் பின்னர் பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதேபோல ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார்.

சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் நீச்சல் குளத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் சுருதி இது என்று வியப்படைந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement