பாரதி கண்ணம்மா சீரியலின் கிளைமாக்ஸ் இது தானா ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.

0
799
barathi
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியலின் கிளைமாக்ஸ் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி இருப்பதால் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள். இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த சில வாரமாகவே சீரியலில் மருத்துவமனையை தீவிரவாதி கும்பல் ஹைஜாக் செய்கிறது. தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற போலீஸ் முயற்சி செய்கின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியல் கதை:

பாரதியை மனித வெடிகுண்டாக மாற்றி வைத்திருக்கிறார்கள். பின் கண்ணம்மா பாரதியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இறுதியில் சீரியலில் தீவிரவாதிகள் இடம் இருந்து மக்களை பாரதியும், கண்ணம்மாவும் காப்பாற்றி விடுகிறார்கள். பாரதியின் மொத்த குடும்பமும் வீட்டிற்கு வருகிறார்கள். அங்கேயே கண்ணம்மாவும் தங்குகிறார். பாரதி கண்ணம்மாவினுடைய பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கிறார். கண்ணம்மாவும் பாரதியை குறித்து நினைத்து பார்க்கிறார்.

-விளம்பரம்-

சீரியலில் வரும் டீவ்ஸ்ட்:

எப்படியாவது இவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்ற முயற்சியில் பாரதியின் அம்மா, அப்பா, தம்பியும் இருக்கிறார்கள். அதோடு தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றியதற்கு பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் விருது கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் வெண்பா தான் கர்ப்பமாக இருப்பதை அறிகிறார். அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். வெண்பாவிற்கு கல்யாணம் ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெறுகிறது. இப்படி சீரியல் வேக வேகமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சீரியல் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

சீரியல் கிளைமாக்ஸ் குறித்த தகவல்:

அதாவது, சீரியலில் லட்சுமிக்கு பாரதி பற்றிய உண்மையும், ஹேமா பற்றிய உண்மையும் தெரிய வருகிறது. ஹேமா பற்றி உண்மையை பாரதி தெரிந்து கொள்கிறார். கடைசியில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் மட்டும் போதும் இந்த பிரச்சினை முடிந்து விடும் என்ற அளவிற்கு சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் பாரதி கண்ணம்மா தொடரை விரைவில் முடிக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருமா? இயக்குனர் உடைய முடிவு தான் என்ன? என்பது தெரியவில்லை. இனிவரும் காலங்களில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement