பொது நிகழ்ச்சியில் இளம் நடிகையுடன் பாரதி ராஜா செய்த செயல் – இணையத்தில் தீயாக பரவும் வீடியோ இதோ.

0
563
barathiraja
- Advertisement -

பொது இடத்தில் இயக்குனர் பாரதி ராஜா அவர்கள் நடிகை விஜய லட்சுமி உடன் செய்த செயல் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு பிறகு இயக்குனர் இமயம் ஆக தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் பாரதிராஜா. அந்த அளவிற்கு இவரின் படைப்புகள் எல்லாம் புகழ் பெற்று இருந்தது. இன்றும் இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

1977ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் முதன்முறையாக வெளியாகிய 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார். அதோடு முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

பாரதிராஜாவின் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது. அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இதனாலேயே இவரை இயக்குனர் இமயம் என்று அழைத்தார்கள். பாரதிராஜா அவர்கள் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.

பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகைகள்:

பல நடிகர்கள் இவர் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட மாட்டோமா? என்று ஏங்கியவர்கள் உண்டு. அந்த அளவிற்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். மேலும், இவருடைய படங்கள் எல்லாம் தேசிய விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது. மேலும், தமிழ் சினிமா உலகில் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ஸ்ரீதேவி போன்ற பல கதாநாயகிகளை சினிமா உலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததே பாரதிராஜா தான்.

-விளம்பரம்-

ராக்கி படத்தில் பாரதிராஜா:

அதோடு சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வருகிறார். தற்போது இவர் படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நயன்தாரா– விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருந்த ராக்கி படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். படத்தில் பாரதிராஜா வேற லெவல்ல படத்தில் மிரட்டியிருக்கிறார். இந்தநிலையில் 16 வயது பையனாகவே பாரதிராஜா துள்ளிக் கொண்டு ஓடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால்,

நிகழ்ச்சியில் பாரதிராஜா செய்தது:

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாரதிராஜா கலந்து கொண்டிருந்தார். இதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது நடிகை விஜயலட்சுமி உடன் பாரதிராஜா துள்ளிக்குதித்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் உங்களுக்கு வயது ஆகவில்லை. உங்கள் படத்திற்கு மட்டும் 16 வயது இல்லை உங்களுக்கும்தான் என்று கமெண்ட் போட்டிருக்கிறார்கள்.

Advertisement