மணிவண்ணன் திருமணத்தில் அவர் அணிந்திருந்த கோட் யாருடையது தெரியுமா ? இதான் நட்பு

0
431
manivannan
- Advertisement -

திருமணத்தின் போது மணிவண்ணன் அணிந்து இருந்த கோட் சூட் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் உதவி இயக்குனராக அடி எடுத்து வைத்து பின் பல வெற்றிப்படங்களை இயக்கி வெற்றி கண்டது மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் புகழ் கண்டவர் நடிகர் மணிவண்ணன். இவர் சினிமா திரை உலகில் நடிகர், இயக்குனர் ஆக மட்டும் இல்லாமல் தமிழ் உணர்வாளர் ஆகவும் பங்காற்றி இருந்தார்.

-விளம்பரம்-

இவர் தமிழில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராக நடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 50 திரைப்படங்களை அவரே இயக்கியும் இருந்தார். மணிவண்ணன் நடிகர் சத்யராஜின் கல்லூரி நண்பரும் ஆவார். அதனாலே மணிவண்ணன் சத்யராஜை வைத்து 25 படங்கள் எடுத்து இருக்கிறார். மேலும், இவர் படங்களில் வில்லன், குணச்சித்திரம் வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இதனிடையே மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும் ,ரகுவண்ணன் என்ற மகனும்,ஜோதி என்ற மகளும் இருக்கிறார்கள்.

- Advertisement -

மணிவண்ணன் இறப்பு :

இப்படி ஒரு நிலையில் மணிவண்ணனுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சையும், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையும் செய்து இருந்தார்கள். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமலும், நடிக்காமலும் சினிமா துறையில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு ஓய்வுபெற்று இருந்தார் மணிவண்ணன். பின் இவர் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதுகு வலிப்பதாக கூறி இருந்தார். பின்னர் என்ன? நடந்தது என்று தெரியவில்லை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் போட்டு கீழே விழுந்து உயிரிழந்தார் மணிவண்ணன்.

மணிவண்ணன் குடும்பம்:

இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். மேலும், மணிவண்ணன் மனைவி செங்கமலத்தால் அவருடைய கணவர் மரணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனால் இவர் தன்னுடைய கணவனின் இறப்பினை குறித்து ஒவ்வொரு நாளும் அழுது அழுது புலம்பி இருந்தார். பின் மணிவண்ணன் இறந்து சரியாக இரண்டு மாதங்கள் கூட இருந்திருக்காது மணிவண்ணன் மனைவி செங்கமலம் தன்னுடைய உயிரிழந்தார்.

-விளம்பரம்-

மணிவண்ணன் மகன் குறித்த விவரம்:

மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் அவர்கள் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் நடித்து இருந்தார். என்னதான் மணிவண்ணன் மகனாக இருந்தாலும் இவரால் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க முடியவில்லை. தற்போது மணிவண்ணன் மகன் தன்னுடைய குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மணிவண்ணனுடைய பழைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மணிவண்ணன் திருமண புகைப்படம்:

அதாவது, மணிவண்ணன் அவர்கள் தன்னுடைய திருமணத்தில் கோட் சூட் அணிந்திருப்பார். ஆனால், அது அவருடையது இல்லையாம். அவர் அணிந்திருக்கும் கோட் சூட் இயக்குனர் பாரதிராஜா உடையது தான். பாரதிராஜா தான் மணிவண்ணனுக்கு கோட் சூட் கொடுத்ததாக மறைந்த நடிகர் மனோபாலா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement