பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பாவனா.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.! ஏன் தெரியுமா.!

0
1092
Bhavana
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் இன்று (மே 1) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை அவரை விட அவரது ரசிகர்கள் தான் படு கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அஜித் பெயரை பயன்படுத்தி பல ஹாஷ் டேக்குகளை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அஜித்தின் பிறந்தநாளுக்கு பல்வேறு ரசிகர்களும் #ThalaAjith என்ற ஹேஸ் டேக் கை பயன்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி பாவனா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அதில்#HappyBirthdayThalaAjith என்று குறிப்பிடத்தோடு சென்னை அணியில் தோனி சென்னையில் ஆடும் கடைசி போட்டி என்பதால #happylastmatchdaythaladhoni தோனியையும் தல என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் தோனியை தல என்று குறிப்பிடாதீர்கள் என்று பாவனாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

பாவனா ஏற்கனவே தோனி, நோ பால் சர்ச்சையில் சிக்கிய போது தோனிக்கு எதிராக கருத்து பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உண்மையா இவங்க தோனி ரசிகையா இல்லை தல ரசிகையா என்று குழப்பம் தான் ஏற்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement