ரம்பாவிற்கு அப்புறம் நீங்க தான் – பூமி பட நடிகையின் போஸை வர்ணிக்கும் ரசிகர்கள்.

0
1906
nidhi
- Advertisement -

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நிதி அகர்வால். நடிகை நித்தி அகர்வால் திரைப் பட நடிகை மட்டும இல்லாமல் டான்சர், மாடலும் ஆவார். இவர் ஹிந்தியில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தெலுங்கு மொழியில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கும் இந்த படம் வசூல் பெறவில்லை.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து தெலுங்கில் வெளியான ஸ்மார்ட் ஷங்கர் படத்தில் நடித்தார் நிதி அகர்வால். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இயக்குநர் பூரி ஜெகன்நாத், நிதி அகர்வாலுக்கும் இந்தப் படம் மிகப் பெரிய பூஸ்ட் அப் ஆக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது நிதி அகர்வால் அவர்கள் தமிழில் காலடி தடம் பதித்து உள்ளார். தற்போது நடிகை நிதி அகர்வால் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு உள்ளார்.மேலும், லக்ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் “பூமி”.

- Advertisement -

ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லட்சுமண் தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நித்தி அகர்வால் நடித்து உள்ளார் .பூமி படத்தை தொடர்ந்து நடிகை நித்தி அகர்வால் தெலுங்கில் இன்னொரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள பூமி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இது போக மகிழ்திருமேனி இயக்க உள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் துவங்கியது. இப்படி படங்களில் பிஸியாக இருந்து வரும் நிதி அகர்வால் சமூக வலைத்தளத்திலும் பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிதி அகர்வால். சமீபத்தில் தனது தொடையழகை காட்டி ரசிகர்களை மயக்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ரம்பாவிற்கு பின் தொடையழகி நீங்க தான் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement