ஒவ்வொருத்தனும் 50 Fake ஐடி வச்சிருக்கான் - பூமி பட இயக்குனர் புலம்பல் ட்வீட். விட்ருங்கைய்யா பாவம்.
இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் 'பூமி'. இப்படம் கடந்த ஜனவரி 14-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இயக்குனர் லக்ஷ்மன் இந்த படத்திற்கு முன்னர் ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் என்று இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். இந்த இரண்டு படத்திலுமே ஜெயம்ரவி தான் கதாநாயகன் இந்த இரண்டு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ஆனால், பூமி திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் 16 வயதினிலே தன் அறிவியல் அறிவை பயன்படுத்தி சாட்டிலைட் செய்யும் மாணவனாக வரும் ஜெயம் ரவி பின்னர் நாசா உதவியுடன் படிப்பை முடித்துவிட்டு அங்கேயே ஒரு விஞ்ஞானியாக வேலை செய்கிறார்.
இதனாலேயே இந்த படத்தை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை பற்றிய பல்வேறு விதமான மீம்களும் ட்ரோல்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த படத்தை இயக்கிய லக்ஷ்மணையும் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் கொஞ்சம் கடுப்பான லக்ஷ்மணன், ஒவ்வொருவரும் ஒரு 50 fake ஐடியை வைத்துக்கொண்ட நான் செய்தது தவறு என்று நிரூபிக்க பார்க்கிறார்கள். இந்த 50 நபர்கள் நல்ல மனிதர்களை அழித்து விடுவார்கள். ஆனால், நல்ல மனிதர்களுக்கு இதெல்லாம் தேவை இல்லை. ஏனென்றால் அவர்கள் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். எனவே, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார் லக்ஷ்மன்.
https://twitter.com/dirlakshman/status/1351223405975056390
ஏற்கனவே ட்விட்டர் வாசி ஒருவர், 'பூமி' படம் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுவரை நான் பார்த்த படங்களில் 'பூமி' போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை. 'சுறா', 'ஆழ்வார்', 'அஞ்சான்', 'ராஜபாட்டை' வரிசையில் இந்த படம் அமைந்துள்ளது. இயக்குநர் லக்ஷ்மணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி" என்று பதிவிட்டு இருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் லக்ஷ்மண் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:"சார். நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். 'ரோமியோ ஜூலியட்' எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ. நீங்க சூப்பர், ஜெயிச்சிட்டீங்க. நான் தோத்துட்டேன்" என்று பதிவிட்டு இருந்தார்.