நீச்சல் குளத்தில் பேக் நீச்சல் போட்ட பூமிகா – இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ.

0
284
bhumika
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் நடிக்கும் நடிகைகள் பலர் சில ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பது பெரிய விஷயம். அதிலும் நாலைந்து படங்களில் நடித்துவிட்டு பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியாமல் போகிறது. இருந்தும் சிலர் விடாமுயற்சியினால் சினிமா உலகில் நீடித்துக் கொண்டு வருகிறார்கள். அதில் அவர்கள் கதாநாயகியாக இருப்பது அரிதான ஒன்று. அந்த வகையில் சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் பூமிகா. இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2000ம் ஆண்டில் வெளிவந்த யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
கணவர், மகனுடன் செம கொண்டாட்டத்தில் நடிகை பூமிகா! 43 வயசுலயும் பயங்கர  மாடர்னாக எப்படி இருக்காரு பார்த்தீர்களா!! - TamilSpark

பின் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘பத்ரி’ என்ற படத்தில் பூமிகா நடித்திருந்தார். பிறகு தமிழில் இவர் ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் என்று சில படங்களில் நடித்திருந்தாலும் என்றென்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பஞ்சாபி, போஜ்புரி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பிற மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

- Advertisement -

பூமிகா கடைசியாக நடித்த படம்:

மேலும், இறுதியாக தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே பூமிகா அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாரத் தாகூர் என்வரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வந்த பாரத் தாகூர் யோகா ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் இவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டு குடும்பத்தை கவனித்து வந்தார்.

bhumika chawla swim suit photos go viral | Samayam Tamil Photogallery

பூமிகா வீடியோ,புகைப்படங்கள்:

பின் மீண்டும் தெலுங்கு படங்களில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். இருந்தாலும் இவர் படங்களில் குணசித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார். அதோடு 2016 இல் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படம் அவருக்கு மீண்டும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்தது. இது ஒரு பக்கம் இருக்க இவர் எப்போதும் சமூக வளைத்ததில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்து உள்ளார்.

-விளம்பரம்-
Bhumika in Birthday Celebration with Family | tamil cinema news

பூமிகாவின் நீச்சல் குளம் வீடியோ:

மேலும், சமீப காலமாக பூமிகா குட்டை ஆடைகளிலும், கிளாமரான ஆடைகளிலும் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சிலர் ஆதரித்தும் விமர்சித்தும் கருத்து போட்டு இருந்தார்கள். அதோடு சமீபத்தில் பூமிகா நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்துகொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்து 40 வயதை கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் வயதை இருக்கிறார் பூமிகா என்று ரசிகர்கள் புலம்பி தள்ளினார்கள்.
இந்நிலையில் பூமிகா உடைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்:

அதில் பூமிகா அவர்கள் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மல்லாக்க படுத்து கொண்டு நீச்சல் அடித்து இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள் பலரும் வயதானாலும் உங்களுடைய அழகும் ஸ்டைலும் போகவில்லை என்றும், இவ்வளவு வயதிலும் இளமையாக இருக்கிறீர்களே! என்றும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். அதோடு பூமிகாவின் இந்த நீச்சல் கிளாமர் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement