விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 51 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.
பிக் பாஸ் 9:
இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. பின் ஆறாவது வாரத்தில் எதிர்பார்க்காத வகையில் திவாகர் தான் வெளியேறினார். பெண்கள் விஷயங்களில் அத்துமீறுதல், ஜாதி ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்தியதால் தான் திவாகர் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டது. பின் ஏழாவது வாரத்தில் fj தான் கேப்டன் ஆகி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் மூன்று அணிகளாக பிரிந்து விளையாடி இருந்தார்கள். அதில் திவ்யா, சாண்ட்ரா, பிரஜன் செய்த அட்ராசிட்டி அளவே இல்லை. வார இறுதியில் விஜய் சேதுபதி மூவரையும் வெளுத்து வாங்கி இருந்தார். இந்த முறை பார்வதி தப்பித்து விட்டார். பின் கடந்த வாரத்தில் அமித், கனி, சுபிக்ஷா, கெமி, சாண்ட்ரா, திவ்யா, பார்வதி, வியானா, சபரி, விக்ரம், ப்ரஜன், அரோரா, ரம்யா ஆகியோர் பெயர்கள் நாமினேட் பட்டியலில் இடம் பெற்று இருந்தது.
https://www.youtube.com/watch?v=Xar1XyNkw-c
நாமினேஷன் லிஸ்ட்:
இதில் குறைவான வாக்குகளை பெற்று கெமி தான் வெளியேறி இருந்தார். பின் எட்டாவது வாரத்தில் fj கேப்டன் ஆகி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் எட்டாவது வாரத்தில் நாமினேட் பட்டியல் குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் சாண்ட்ரா, ப்ரஜன், திவ்யா, கனி, கம்ருதீன், விக்ரம், அமித், ரம்யா, வியானா, அரோரா,பார்வதி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது. இதில் யார் இந்த வாரம் வெளியே போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.






