பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரவீன் காந்தி வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி ஒரு வாரம் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கி இருந்தது. பின் முதல் நாளே நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா ,ஆதிரை , அப்சரா , பிரவீன் ராஜ் , பிரவீன் காந்தி, திவாகர், கலையரசன் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இருந்தார்கள்.
நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது.
பிக் பாஸ் 9:
இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருக்கிறார். தவிர்க்க முடியாத காரணங்களால் தான் இவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டது. பின் இது தொடர்பாக பிக் பாஸ் வீடு பொய்யாக இருக்கிறது, போட்டியாளர்கள் நடிக்கிறார்கள் என்று நந்தினி கூறி இருந்தார். பின் கடந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் விஜய் சேதுபதி வந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் வறுத்தெடுத்து இருந்தார்.

முதல் வாரம் எவிக்ஷன்:
குறிப்பாக கம்ருதீன், பார்வதியால் எதுவுமே பேச முடியவில்லை. இருவரும் செம பல்பு வாங்கி இருந்தார்கள். கடைசியாக முதல் வார எவிக்ஷன் நடந்தது. அதில் திவாகர், கலையரசன் ஆகியோரில் ஒருவர் தான் வெளியேறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளி வரும்போது பிரவீன் காந்தியிடம் போட்டியாளர்கள் பேசினார்கள். ஆனால், அவர் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்திவிட்டு வெளியே வந்தார். இதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=pNeEog9HrZ8
பிரவீன் காந்தி சம்பளம்:
இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு பிரவீன் காந்தி வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த விவரம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது பிரவீன் காந்திக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்க ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் என்று பேசப்பட்டிருந்தது. இவர் மொத்தம் ஆறு நாட்கள் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தார். மொத்தமாக இவருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.






