பிக் பாஸை விட்டு வெளியேறிய ADK சம்பளம் எவ்வளவு தெரியுமா? – அது பணப்பெட்டியிலேயே இருந்திருக்குமே!

0
597
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி,அசல் கோளாறு, ஷெரினா, மெட்டிஒலி நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இதில் அமுதவாணன், Adk ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக ரச்சிதா வெளியேறி இருந்தது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த சீசனின் கடைசி நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. எந்த வாரமும் இல்லாமல் இந்த வாரம் தான் நாமினேஷன் மிகவும் தாமதமாக நடைபெற்றது.

- Advertisement -

கடைசி நாமிநேஷன் :

அமுதவாணன் ஏற்கனவே டிக்கெட்டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று இருப்பதால் அவர் நேரடியாக இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுவிட்டார். எனவே, மீதமிருந்த அசிம், சிவின், கதிரவன் ஏடிகே. மைனா நந்தினி ஆகிய ஆறு பேருக்குள் மத்தியில் இந்த வாரம் நாமினேஷன் நடைபெற்றது.இதில் பலரும் எதிர்பாரத விதமாக அசீம் விக்ரமனை நாமினேட் செய்யவில்லை. ஆனால், விக்ரமன் அசிமை நாமினேட் செய்திருந்தார்.

பரபரப்பாக நடந்த Voting :

இந்த வார நாமினேஷன் முடிவில் நேரடி இறுதிப்போட்டைக்கு தகுதி பெற்றிருக்கும் அமுதவாணனைத் தவிர அசிம், விக்ரமன், சிவின், கதிரவன் ஏடிகே. மைனா நந்தினி என ஆறு போட்டியாளர்களுமே நாமினேட் ஆகியிருக்கிறார்கள்.எனவே இறுதி வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. இதில் கண்டிப்பாக விக்ரமன் மற்றும் சிவின் வெளியேற அதிக வாய்ப்பு இல்லை. ADK ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால், அடிக்கடி புறம்பேசி தன் பெயரை டேமேஜ் செய்துகொண்டார்.

-விளம்பரம்-

வெளியேறிய ADK :

இதனால் நெட்டிசன்கள் பலர் இவருக்கும் ஊர் கிழவி ADK என்ற பட்டமும் கொடுத்து இருந்தனர். இறுதி வாரம் என்பதால் பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பல போட்டியாளர்கள் உள்ளே சென்ற வண்ணம் இருகின்றனர்.பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பலரும் சக போட்டியாளர்களுடன் ஜாலியாக சில டாக்குகளை விளையாடி வருகின்றனர். மேலும், உள்ளே சென்றவர்கள் கொடுக்கும் டாஸ்கை தட்டாமல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதில் ADK மொட்டை எல்லாம் அடித்துக்கொண்டார். ஆனால், அவரது தியாகம் வீணாகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

ADK சம்பளம் :

இந்த நிலையில் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ADKவிற்கு ஒரு நாளுக்கு 16ஆயிரம் ரூபாய் முதல் 19ஆயிரம் ரூபாய் வரையில் சம்பளமாக பேசப்பட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். இவர் 97 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்க்குள் இருந்தார். அதனை வைத்து பார்க்கும் போது குறைந்த பட்சம் ஒரு நாளுக்கு 16ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொண்டாள் 97 நாட்களுக்கு 15லட்சத்தி 52ஆயிரம் ரூபாய் வருகிறது. மேலும் பணப்பெட்டி டாஸ்கில் 20 லட்சம் வரை இருக்கும் என்பதும் குறிப்பிடதக்கது.

Advertisement