விஜய்யா, அஜித்தா? யாஷிகாவிற்கு பிடித்த நடிகர் இவர் தானாம்..!

0
181
bigg-Yashika
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. மக்கள் மத்தியில் இவர்கள் இருவருக்கும் எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றாரோ அதே அளவில் சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களும் இவர்கள் இருவரின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

Yashika

அதே போல எந்த பிரபலத்திடனும் பேட்டி எடுத்தாலும் அவர்களிடம் விஜய் மற்றும் அஜித் குறித்த கேள்வி இடம்பெறாமல் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் யாஷிகா ஆனந்த்.

- Advertisement -

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பெரும் பிரபலமானார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் பதிலளித்து கொண்டிருந்த யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர் உங்களின் அபிமான நடிகர் யார் என்று கேட்டிருந்தார். அதற்கு தல என்று பதிலளித்துள்ளார் யாஷிகா.

Yashika

Yashika

அதே போல நீங்கள் யாரையாவது காதலளிக்கிறீர்களா என்று கேட்கப்பட்ட போது, எஸ் என்னுடைய வேலையை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், யாஷிகாவிற்கு மிக்கு என்ற செல்ல பெயரும் இருக்கிறதாம்.

Advertisement