பிக் பாஸ் காஜல் நடிக்கும் படத்திற்கு பிரபல நடிகரின் பாடல் தான் தலைப்பு

0
1300
- Advertisement -

100 நாள் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடையில் வீட்டிற்குள் சென்றவர் நடிகை காஜல் பசுபதி. வீட்டின் உள்ளே மொத்தம் 16 நாட்கள் மட்டுமே இருந்தாலும் ஒரு சின்ன களேபரத்தையே ஏற்படுத்தி சென்றவர் காஜல்.

-விளம்பரம்-

kaka

- Advertisement -

தனது அசட்டையான அலட்டல் இல்லாத நடவடிக்கைகளால் வீட்டில் அனைவரது விமர்சனத்தையும் பெற்றவர். பின்னர் மன்னிப்புகள் எல்லாம் கேட்டு வீட்டை விட்டு 16 நாளில் வெளியேறினார் காஜல்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் சூட்டோடு சூடாக கிடைத்த பிரபலத்தை வைத்து ஒரு சில படங்களில் நடித்துவிட்டார். கலகலப்பு – 2 படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துவிட்டார்.

-விளம்பரம்-

kajal-pasupathi

தற்போது, இயக்குனர் அபிலாஷ் இயக்கத்தில் ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் தலைப்பினை நேற்று வெளியிட்டார் இயக்குனர்.

இந்த தலைப்பு, சூரியா மற்றும் ஜோதிகா நடித்த காக்க காக்க படத்தில் வரும் ஒரு ரோமேன்ஸ் பாடலின் வரிகள் ஆகும்.

Advertisement