பிக்பாஸ் இல் இருந்து வெளியேறியும் ஐஸ்வர்யாவை கலாய்க்கும் பொன்னம்பலம்.! Dubsmash இதோ உள்ளே.!

0
539
pon
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். ஆனால், இந்த 8 போட்டியளர்களில் நடிகர் பொன்னம்பலத்தை தான் ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்கின்றனர் என்று கூறினாலும் அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை யாஷிகா, ஷாரிக், மஹத், ஐஸ்வர்யா போன்றவர்கள் செய்த பல அநாகரிக செயல்களை தைரியமாக சுட்டி காட்டி கமலிடம் கூட கை தட்டளை வாங்கி இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவிற்கும், பொன்னம்பத்திற்கும் தான் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது.

- Advertisement -

Ponnambalam-In-The-Bigg-Boss-House

பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற சர்வாதிகார டாஸ்கின் போது கூட பொன்னம்பலம் தான் ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளி, அந்த டாஸ்கை முடித்து வைத்தார். இப்படி ஐஸ்வர்யாவிற்கு எதிராக பல செயல்களை செய்து வந்தார் நடிகர் பொன்னம்பலம். இருப்பினும் நடிகர் பொன்னம்பலம் வெளியேறிய சில நாட்களுக்கு முன்பாக ஐஸ்வர்யாவிடம் சகஜமாக பேசிவந்தார்.

-விளம்பரம்-

இதனால் ஐஸ்வர்வின் மீது பொன்னம்பலத்திற்கு எந்த வித பிரச்னையும் இல்லை என்று ரசிகர்கள் நினைத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் பொன்னம்பலம், ஐஸ்வர்யா பேசிய சில விடயங்களை டப் ஸ்மேஸ் செய்து அசத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.

Advertisement