பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக முறை கேப்டனாக வந்த போட்டியாளர். இந்த வாரமும் இவர் எஸ்கேப் – இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யார் யார் தெரியுமா?

0
471
biggboss
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6ன் 11வது வாரத்திற்காக நாமினேஷன் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 70 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருந்தனர்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா ஆகியோர் வெளியேறிய நிலையில் நேற்று நடைபெற்ற நாமினேஷனில் ஜனனி வெளியேற்றப்பட்டார். ஜனனியின் வெளியேற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இன்று நடைபெற்ற கேப்டன்ஸி டாஸ்க்கில் மணிகண்டன் வெற்றி பெற்று நான்காவது முறையாக பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக வந்திருக்கிறார். இந்த சீசனில் மைனா நந்தினி இதுவரை மூன்று முறை கேப்டனாக இருந்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த 10 வாரத்தில் 7 வாரம் மைனா மற்றும் மணிகண்டன் மட்டுமே கேப்டன்களாக இருந்துவந்திருக்கின்றனர். மணிகண்டன் இந்த முறை கேப்டன் ஆனதால் இதுவரை நடந்து முடிந்த அனைத்து பிக் பாஸ் சீசன்களிலும் அதிக முறை கேப்டன் ஆன ஒரே போட்டியாளர் என்ற பெருமை பெற்று இருக்கிறார் மணிகண்டன்.

இது ஒருபுறம் இருக்க இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெற்றது. இதில் கேப்டன் மணிகண்டன், நாமினேசன் ஃப்ரீ டாஸ்கை பெற்ற Adk மற்றும் அமுதவானணை நாமினேஷன் செய்யக்கூடாது என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இந்த வாரமும் ஓப்பன் நாமினேஷன் தான் நடைபெற்றது. இந்த வார நாமினேஷனில் மணிகண்டன் ஏடிகே அமுதவானனை தவிர மற்ற ஏழு பேரும் டாமினேட் செய்யப்பட்டார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், கதிரவன் சிவின், தனலட்சுமி, மைனா நந்தினி ஆகிய ஏழு பேரும் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இதில் தனலட்சுமி, கதிர், மைனா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மைனா நந்தினி மற்றும் தனலக்ஷ்மி தான் அதிக வெறுப்பை சம்பாதித்து இருக்கின்றனர். மேலும், கதிர் மிக்சர் போட்டியாளர் என்ற முத்திரையை பெற்று இருக்கிறார். எனவே, இவர்கள் மூவரில் யாவரது வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Advertisement