பல வாரம Escape ஆகி வந்தாரு,இந்த வாரம் Close – பிக் பாஸில் இருந்து வெளியேறிய அந்த போட்டியாளர்.

0
349
biggboss
- Advertisement -

பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சி கடந்த ஆக்டோபர் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் வலிமையான போட்டியாளரான தனலட்சிமி வெளியேறிய நிலையில் இந்த வாரம் வெளியேறப் போகும் அந்த போட்டியாளர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் தற்போது 9 பேர் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டியை விறுவிறுப்பாக்க பிக் பாஸ் பல பதிய டாஸ்குகளை கொடுத்து வருகிறார்.

-விளம்பரம்-
biggboss

எஸ்கேப் ஆனா ரட்சித்தா:

அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நாமினேஷனுக்காக ஓபன் நாமினேஷன் நடந்தது. அதில் சீரியல் நடிகையான ரட்சித்தாவை தவிர ஆசிம், மணிகண்டன், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், எடிகே, மைனா நந்தினி உள்ளிட்ட 8 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார். இதில் சோகம் என்னவென்றால் பல நாட்கள் கழித்து இப்போதுதான் பிக் பாஸ் வீட்டின் தலைவரான அமுதவாணனும் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்.

- Advertisement -

ஃபீரிஸ் டாஸ்க் :

இந்த நிலையில் இந்த வாரம் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த ஃபீரிஸ் டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வந்தது மிகவும் கலகலப்பாக இருந்தது. அதிலும் அமுதவாணனின் குடும்பத்தில் அவரது மகன் மற்ற போட்டியாளர்களை போல செய்து காட்டியது பிக் பாஸ் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. அதோடு மைனா நந்தினியின் கணவர் வந்து மைனாவை நீ இந்த வீட்டில் இருக்கவே தகுதியில்லாதவர் என அறிவுரை கூறியதும் குறிப்பிடதக்கது.

ஐஸ்வர்யா ராஜேஷ் :

மேலும் பல சுவாரசியமான நிகழ்வுகழும் இந்த டாஸ்கில் நடந்தன. அதோடு வெள்ளித்திரை பிரபலமான மணிகண்டனின் சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷும் வந்திருந்தார். தற்போதுதான் இவர்கள் இருவரும் நடித்திருந்த “டிரைவர் ஜமுனா” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்தவார நாமினேஷனில் யார் வெளியேறப்போகிறார்கள் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் ஓட்டுகளின் அடிப்படையிலும், கருத்துக்கணிப்பு அடிப்படையிலும் மைனா நந்தினி, அசீம், மணிகண்டன் என மூன்று பேரும் ஆபத்தான இடத்தில் உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் :

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி மிகக் குறைந்த வாக்குகள் பெற்ற மணிகண்டன் வெளியேறுவார் என தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மணிகண்டன் தொடக்கத்திலிருந்தே விகாரமனை எதிர்த்தும், அசீமை பாராட்டியும் பேசி வருகிறார். ஆனால் இவர்கள் இருவரையும் பார்க்கும் நேரத்தில் தன்னுடைய விளையாட்டை விட்டுவிட்டார். மேலும் கடந்த மூன்று வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்கள் மட்டுமே வெளியேறி வந்த நிலையில் இந்த வாரம் மணிகண்டன் வெளியேறுவார் என்பது உறுதியாகி உள்ளது.

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

ஆனால் மணிகண்டனும், தொகுப்பாளனியான மைனா நந்தினியும் சில வாரங்களுக்கு முன்னரே வெளியேறுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில் மைனா நந்தினி விஜய் டிவியின் தொகுப்பாளினி என்பதாலும், மணிகண்டனின் சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம் வெளியாகும் என்பதினால் இவர்கள் உள்ளே இருந்தால் பிரபலம் கிடைக்கும் எனபதற்காகத்தான் இவர்களை இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்திருந்தனர் என்று நெட்டிசங்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement