பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் போட்டியாளர்.! பிக் பாஸ் வீட்டினுள் இருந்து வரவேற்ற கமல்.!

By Rajkumar · 23/6/2019

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் விவரம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இம்முறை பிக் பாஸ் வீட்டினுள் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

தனது தந்தை வீட்டில் இருந்து பிக் பாஸ் செட்டிற்கு கிளம்பிய கமல் பின்னர் பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்து அங்கே உள்ள அணைத்து மாற்றங்களை பற்றி விவரித்து கொண்டிருந்தார். இம்முறை நீச்சல் தொட்டியில் தண்ணீர் கிடையாது. சமயலறையில் அளவான எரிவாயு மட்டுமே அளிக்கபடும்.

இதையும் பாருங்க : உடல் எடை குறைத்து அடையாளம் தெரியாமல் மாறிப்போன மேயாத மான் நடிகர்.! 

இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக மாற்றங்களை விவரித்து கொண்டிருந்த கமல், கன்பெசன் ரூமிற்கு சென்றார். பின்னர் பிக் பாஸிடம் பேசிய கமல், முதல் போட்டியாளரை பிக் பாஸ் வீட்டில் இருந்தே வரவேற்பதாக கூறினார் கமல். பின்னர் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் பிரபல செய்தி வாசிப்பாளராக பாத்திமா பாபு.

பின்னர் கமலிடம் பேசிய பாத்திமா பாபு, என்னை ஒரு செய்தி வாசிப்பாளராக ரசிகர்களுக்கு தெரியும் ஆனால், நான் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி என்பதை ரசிகர்களுக்கு தெரியபடுத்தவே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறினார். பின்னர் கமல், அவருக்கு ஒரு வின்னர் என்ற பதக்கம் ஒன்றை பரிசாக அளித்துவிட்டு சென்றார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full