உடல் எடை குறைத்து அடையாளம் தெரியாமல் மாறிப்போன மேயாத மான் நடிகர்.!

0
1482
Vivek-Presanna

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மேயாத மான் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் வைபவின் நண்பராகவும், இந்துஜாவின் காதலராகவும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் விவேக் பிரசன்னா. இந்த படத்திற்கு முன்பாகவே விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’, இறைவி, மாநகரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது மேயதமான் திரைப்படம் தான்.

தற்போது இவர், அமலா பால் நடித்து வரும் ஆடை படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர், இந்த படத்தில் இணைந்துள்ளதை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

இதையும் பாருங்க : பிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியம்.! அப்பா விஜயோட பெயர் தெரியுமா.? 

- Advertisement -

அவர்கள் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் நடிகர் விவேக் பிரசன்னா அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஒல்லியாக மாறியுள்ளார். மேலும், நடிகர் விவேக் பிரசன்னாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதிலும் அவர் உடல் எடை குறைந்தே காணப்படுகிறார்.

Image result for vivek prasanna

அமலா பால் நடித்து வரும் ஆடை படத்தை ‘மேயாதமான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் தான் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி 5 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்ட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த டீசரில் நடிகை அமலா பால் ஆடை இல்லாமல் இருப்பது தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement