பிக் நிகழ்ச்சி இன்று எத்தனை மணிக்கு துவங்குகிறது.! அறிவித்த கமல்.!

0
2739
Bigg-Boss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இன்று (அக்டோபர் 6) நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 2 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ்.

இதையும் பாருங்க : இந்தியன் 2- வில் தர்ஷன் நடிப்பது உண்மையா.! கமல் என்ன சொன்னார்.! தர்ஷன் நண்பர் பேட்டி.!

- Advertisement -

இறுதி போட்டியில் ஷெரின், முகென், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் தகுதி பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் முழுக்க படு மும்மரமாக வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு வாக்களித்து வந்தனர். ஹாட் ஸ்டார் மூலமும் மிஸ்டு கால் மூலமும் ரசிகர்கள் வாக்களித்து வந்தனர். நேற்றுடன் வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில்நேற்று வாக்கு எண்ணிக்கை 2 மணிக்கு துவங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் எண்டிமால் குழுவின் முக்கிய உறுப்பினர், விஜய் டிவி சார்பாக ஒருவர் மற்றும் 5 முக்கிய ஸ்பான்சர்ஸ் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இறுதி போட்டியின் ஷூட்டிங் நாளை மாலை 3 மணிக்கு தான் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இன்று இறுதி போட்டியின் கொண்டாட்டம் மட்டும் எடுக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பொதுவாக ஒரு நாளைக்கு முன்பாக எடுக்கப்பட்ட காட்சிகளை தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்புவார்கள். அதே போல இறுதி போட்டியை நேரலை கூட செய்ய மாட்டார்கள். ஆனால், இம்முறை வெற்றியாளர் யார் என்பது வெளியில் கசிந்துவிட கூடாது என்பதற்காக நாளை மாலை தான் இறுதி போட்டிக்கான ஷூட்டிங் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே,இன்று மாலை 3 மணி வரை வெற்றியாளர் யார் என்பது கண்டிப்பாக தெரியாது என்று கூறப்படுகிறது .

இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கமல் அவர்கள் இந்த சீசன் வெற்றியாளர் யார் என்பது இன்று மாலை 6 மணிக்கு தெரிய இருக்கிறது என்று கூறியுள்ளார். எனவே, இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது என்று எதிர் பார்க்கப் படுகிறது. மேலும், இறுதி போட்டியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Advertisement