பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் கமல்.! வைரலாகும் வீடியோ.!

0
672
Big-Boss
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை மறுநாள் துவங்க இருக்கிறது. ஞாயிற்று கிழமை 8 மணிக்கு கோலாகலமாக இந்த நிகழ்ச்சி தூங்க இருக்கிறது. கடந்த சில வாரங்களாக 2 ப்ரோமோக்களை மாறி மாறி ஒளிபரப்பி வந்த விஜய் டிவி தற்போது அடுத்தடுத்து ப்ரோமோகளை வெளியிட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த ஜாங்கிரி மதுமிதா மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார். மற்ற போட்டியாளர்கள் பற்றிய விவரங்களை பிக் பாஸ் குழு வெளியில் கசிந்து விடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

ஜாங்கிரி மதுமிதாவை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகரும், கர்நாடக இசை கலைஞருமான மோகன் வைத்யா கலந்துகொள்ள போவதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. பாடகரான மோகன் வைத்யா தமிழில் அந்நியன், சேது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பஸ் நிகழ்ச்சி நாளை மறுநாள் அதாவது ஞாயிற்று கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக பூந்தமல்லியில் உள்ள ஈ வி பில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் படபிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் கமல். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement