கடைசியில் வைல்ட் கார்டு போட்டியாளர் இவர் தானா.! இனிமே செமயா இருக்க போகுது.!

0
23353
kasthuri
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 பேர் வெளியான நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைய போவது யார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 17 வது போட்டியாளராக ஆல்யா மானஸா, சங்கீதா கிரிஷ், கஸ்தூரி போன்ற பலரின் பெயர் அடிபட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் கஸ்தூரி தான் 17 அந்த வது போட்டியாளர் என்று ஒரு செய்தி பரவியது.

-விளம்பரம்-

சமீபத்தில் நடிகை கஸ்தூரி, வாட்ஸ் அப் உரையாடல் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு முக்கிய நபருடன் உரையாடி இருக்கும் கஸ்தூரி வரும் 4 ஆம் தேதி பிக் பாஸ் வீட்டில் நுழைய தயார் என்பது போல தெரிவித்துள்ளார். ஆனால், இந்த பதிவு போலியானது என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

மேலும், இந்த செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே அதனை மறுத்து கஸ்தூரி ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் இன்று ஒளிபரப்பான முதல் ப்ரோமோவில் கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால், அவர் போட்டியாளராக சென்றுள்ளாரா இல்லை சிறப்பு விருந்தினராக சென்றுள்ளாரா என்று தான் தெரியவில்லை.

இருப்பினும் ஒருவேளை கஸ்தூரி போட்டியாளராக உள்ளே சென்றிருந்தால் இனி நிகழ்ச்சியில் ஸ்வாரசியத்திற்கு பஞ்சமே இருக்காது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

-விளம்பரம்-
Advertisement