அப்போ ஆரி தான் வின்னரா ? விஜய் டிவி ப்ரோமோவிற்கு கீழயே விஜய் டிவி நடிகை போட்ட பதிவு.

0
2111
pavani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்றோடு (ஜனவரி 17) நிறைவடைய இருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இறுதி போட்டி 6 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த சீனில் பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவிவந்தது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியாகவே இருந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ஆரி தான் பெருவாரியான வாக்குகளை பெற்று பிக் பாஸ் பட்டத்தை வென்றுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்த பவானி ரெட்டி இன்று வெளியாகியுள்ள பிக் பாஸ் ப்ரோமோவிற்கு கீழே வாழ்த்துக்கள் ஆரி என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் அப்போ ஆரி டைட்டில் வெற்றி பெற்றதை உறுதியே செய்துவிட்டனர்.

ரியோ கடைசி வார நாமினேஷனில் இருந்த போது அவரை இறுதி போட்டிக்கு அனுப்ப பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். பலரும் ரியோவிற்கு 50 வாக்குகளை அளித்த ஸ்க்ரீன் ஷாட்டை கூட தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்னர். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியின் முன்னாள் நடிகையான பவானி ரெட்டி ஆரிக்கு வாழ்த்து சொல்லியுள்ளது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement