துவங்கியது Freeze Task : எதுக்கு இங்க வந்த, லாஸ்லியா தந்தை போல வெளுத்து வாங்கும் ஷிவானியின் தாய்.

0
1282
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாராதிக்கான நாமினேஷன் நடைபெற்று இருந்தது . இந்த வாரம் ஆரி தலைவர் ஆகி இருத்தால் அவரை இந்த வார நாமினேஷனில் இல்லை. இந்த வாரம் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இஇருக்கிறாரகள். இந்த வாரம் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை சீக்ரெட் ரூம் பயன்படுத்தப்பட வில்லை. எனவே, இந்த சீசனில் சீக்ரெட் ரூம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், டிக்கெட் டு பின்னாலே டாஸ்க்கும் நடத்தப்படவில்லை. மேலும், இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டிற்கு வர இருக்கின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இன்று ப்ரீஸ் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதில் முதல் ஆளாக ஷிவானியின் அம்மா உள்ளே சென்று இருக்கிறார். உள்ளே சென்ற அவர் எதுக்கு இங்கே வந்த, இங்க நீ என்ன செய்தாலும் வெளியில் தெரியாது என்று நினைக்கிறாயா என்று கேட்டுள்ளார். இதை பார்க்கும் போது கடந்த சீசனில் ப்ரீஸ் டாஸ்கின் போது சென்ற லாஸ்லியாவின் தந்தை நினைவு தான் வருகிறது என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்

-விளம்பரம்-
Advertisement