காசு கொடுத்து கூட்டினு வந்தீங்களா ? bb கொண்டாட்டத்தின் ரம்யாவின் ப்ரொமோவிற்கு கீழ் குவியும் கமெண்ட்ஸ்.

0
2100
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது.

- Advertisement -

அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் வென்றார் ஆரி. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து பல நாட்கள் ஆன நிலையில் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 7ஆம் தேதி மதியம் 1.30கு ஒளிபரப்பாகப்போகிறது. இந்த நிகழ்ச்சில் சுசித்ரா மட்டும் பங்கு கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை அடிக்கடி வெளியிட்டு வருகிறது விஜய் டிவி.

அந்த வகையில் ஒவ்வ்வொரு போட்டியாளர்களின் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் ரம்யா பாண்டியனை சந்திக்க சில பெண் ரசிகைகள் வந்துள்ளனர். அதில் ஒரு ரசிகை ரம்யா பாண்டியனை பார்த்து தேம்பி தேம்பி அழுதார். இந்த ப்ரோமோவிற்கு கீழே ரம்யா பாண்டியன் கமன்ட் செய்து இருந்தார். ஆனால், இந்த ப்ரோமோவிற்கு கீழே பலரும் காசு கொடுத்து கூட்டிக்கொண்டு வந்தீர்களா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement