பிக் பாஸ் வீட்டின் அடுத்த வைல்டு கார்டு போட்டியாளர் Conform. இத நீங்களே பாருங்க.

0
54143
biggboss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி என்று மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கும் நிலையில் அர்ச்சனா மற்றும் சுசித்ரா என்று இரண்டு வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்கள். இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியல்களில் சிவாணிக்கு ஜோடியாக நடித்த அஸீம் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைய இருக்கிறார் என்று பிரபல பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is aseem.jpg

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என்று பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை அஸீம். இவருக்கும் பகல் நிலவு தொடரில் நடித்த நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக அஸீமுடன் நடித்த சிலர் கடந்த சில மாதத்திற்கு முன்னர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்து இருந்தனர் இது குறித்து அந்த குறிப்பிட்ட பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அஸீமிற்கு ஸோயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு மூன்று வருடங்கள் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். இடையில் தற்போது பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று இருக்கிறது என்று அஸீமுடன் நடித்த நடிகர் ஒருவர் கூறியதாக அந்த பத்திரிக்கையில் எழுதப்பட்டு இருந்தது.

- Advertisement -

மேலும் அசீம் நடவடிக்கை குறித்து டெக்னீஷியன் ஒருவர் பேசியுள்ளது என்னவெனில் அந்த பொண்ணு மிகவும் பாவம் சார் எங்களை பொறுத்தவரை இவர் மேல் தான் தப்பு அவருடைய குணமே அப்படித்தான். ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், அங்கு இவர் படப்பிடிப்பு தளத்தில் செய்த சில செயல்பாடுகள் பிடிக்காததால் அந்தத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதில் அவருக்கு ஜோடியாக ஒரு பெண் அறிமுகமானார். அது தற்போதுதான் பள்ளிக்கூடம் செல்லும் பெண். ஆனால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. இதனால் அசீம் வீட்டில் பிரச்சனை தொடங்கி இருக்கிறது என்றும் கூறப்பட்டது

இப்படி ஒரு நிலையில் அஸீம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 50வது நாளில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அசீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். என்னுடைய பேரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்குகள் இருப்பதாகவும் எனவே அதை நம்பி ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் ஏமாந்து விட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார் அதேபோல இறுதியில் பிக் பாஸ் இந்நிகழ்ச்சியில் வரும் ஸ்லோகனான ‘Expect The Unexpected’ என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement