பிக் பாஸ் 4-ல் அதுல்யா, சுனைனா, ரம்யா பாண்டியனா. அவங்களே என்ன சொல்லி இருகாங்க கேளுங்க.

0
984
bigg
- Advertisement -

பிக் பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சியில் அதுல்யா, சுனைனா, ரம்யா பாண்டியன் போன்றவர்கள் கலந்து கொள்ளப்போவதாக சமீபத்தில் வெளியான செய்திக்கு தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
Athulya

இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே தெலுங்கிலும் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்து உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு அறிவிப்பு வெளியாகிஇருந்தது.

- Advertisement -

மேலும், சமீபத்தில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் லோகோ வெளியாகி இருந்தது. மேலும், பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருந்தது.வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்நிகழ்ச்சியை தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. மேலும், இந்த சீசனில் அதுல்யா, ரம்யா பாண்டியன், சுனைனா போன்றவர்கள் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள சுனைனா, நான் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு சென்று விட்டால் என்னுடைய படங்களை யார் முடிப்பது எப்போதும் நான் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள மாட்டேன். நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல சமீபத்தில் தனது பிறந்தநாளின் போது லைவ் சேட்டில் ஈடுபட்டிருந்த ரம்யா பாண்டியன் பிக்பாஸ் பற்றி எந்த ஒரு தகவலும் வரவில்லை என்றும் கூறியிருக்கிறார் இதேபோல நடிகையாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வந்த செய்தியை மறுத்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement