இது தான் பிக் பாஸ் ஜெயில் – போட்டியாளர்கள் இது உள்ள எப்படி இருக்க போறாங்களோ ? கஷ்டம் தான்.

0
1038
biggbossjail
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்று (அக்டோபர் 4) முதல் துவங்க இருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு தொடர்ந்து தள்ளிப்போன பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒரு வழியாக துவங்க இருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. கொரோணா பிரச்சினை காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

-விளம்பரம்-

போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் நேற்று மாலை துவங்கியது.நேற்றே போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டனர். ஆனால், இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு யார் என்று 100 சதவீத தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் ஒரு சில லீக்ஸ் வெளியாகியுள்ளது.இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டின் சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சென்ற ஆண்டு ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட பிக் பாஸ் ஜெயில் இருந்தது. ஆனால், அதில் கம்பிகளான ஆனா சிறை தான் இருந்தது. இதனால் போட்டியாளர்கள் சிறையில் இருந்தாலும் ஜாலியாக வெளியில் இருப்பவர்களுடன் பேசி கொண்டு இருந்தார்கள். ஆனால், இம்முறை கண்ணாடி சிறை அமைக்கப்ட்டு இருக்கிறது.

எனவே, போட்டியாளர்கள் சிறையின் உள்ளே இருந்து மற்றவர்களை பார்க்கமுடியும். ஆனால், பேசுவது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். அதே போல சென்ற சீசனை போல சிறைக்கு உள்ளே சென்ற பிறகு ரோமன்ஸ் எல்லாம் பண்ண முடியாது. எனவே, இந்த ஆண்டு பிக் பாஸ் சிறைக்கு செல்ல யாரும் விரும்ப மாட்டார்கள்.

-விளம்பரம்-
Advertisement