வெளியானது பிக் பாஸ் வீட்டின் புகைப்படம் – இது தான் பிக் பாஸ் சேர்.

0
698
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்று (அக்டோபர் 4) முதல் துவங்க இருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு தொடர்ந்து தள்ளிப்போன பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒரு வழியாக துவங்க இருக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. கொரோணா பிரச்சினை காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

-விளம்பரம்-

போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் இன்று மாலை துவங்கியதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு யார் என்று 100 சதவீத தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் ஒரு சில லீக்ஸ் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனை ஆண்டு நடக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் இதுகுறித்து ஹாட் ஸ்டாரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ் ரசிகா என்று பதிவிட்டு சில ராசி பலன்களை பதிவிட்டுள்ளது. காத்திருந்த மகிழ்ச்சி கதவை தட்டும் 105 நாட்களுக்கு அன்லிமிடெட் fun-ஐ அனுபவிப்பீர்கள். எதிர்பாராத அதிகாரம் கைக்கு வரும். ஓட்டு போட்டு காரியம் சாதிப்பீர்கள். காரிய சித்தி ஆரம்பம் இன்னும் ஒரு நாளில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் என்பது உறுதியாகியுள்ளது.

எனவே, அப்படி கணக்கு செய்து பார்த்தால் 105வது நாள் ஜனவரி 16, ஞாயிற்று கிழமை வருகிறது. எனவே, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தீபாவளி பண்டிகையையும், பொங்கல் பண்டிகையையும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் தான் கொண்டாடுவார்கள். இதில் தீபாவளி கொண்டாடுவது யார் பொங்கல் வரை தாக்குப்பிடிக்க போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement