பிக்பாஸ் சீசன் 4 பேச்சுவார்த்தை தொடக்கம் – கசியத் தொடங்கிய பிரபலங்களின் பெயர்கள்

0
1077
bigg
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

-விளம்பரம்-
Bigg-boss

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே தெலுங்கிலும் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்து உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு அறிவிப்பு வெளியாகிஇருந்தது. மேலும், சமீபத்தில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் லோகோ வெளியாகி இருந்தது. மேலும், பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ஆனால், தமிழில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் 4 பற்றிய நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்நிகழ்ச்சியை தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அக்டோபர், நவம்பர் என மூன்று மாதங்களில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் விஜய் டிவி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சீசனிலும் கமல் தான் தொகுப்பாளராக உறுதி செய்யப்பட்டள்ளார். அதே போல இந்த சீஸனின் போட்டியாளராக நடிகை சுனைனா, அதுல்யா, நடிகை கிரண், குக் வித் கோமாளி புகழ், ரம்யா பாண்டியன், வித்யூலேகா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

-விளம்பரம்-
Advertisement