போட்டியாளர்கள் குறித்து பேசும் பிக் பாஸ் குரல் – புதிய ப்ரோமோ வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய விஜய் டிவி.

0
3503
biggboss
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது . கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும்.ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது. அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது.

- Advertisement -

இதுவரை பிக் பாஸ் குறித்து இரண்டு ப்ரோமோ மட்டுமே வெளியாகி இருந்தது. அதையே அவ்வப்போது கட் செய்து புதிய ப்ரோமோ போல வெளியிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அதில் பிக் பாஸ் குரலோடு ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும், போட்டியாளர்கள் பற்றியும் பேசியுள்ளார் பிக் பாஸ்.

Advertisement