நீங்க பிக் பாஸ் போவீங்களா ? ரசிகரின் கேள்விக்கு சஸ்பென்ஸான பதிலை சொன்ன பிகில் பட நடிகை அமிர்தா.

0
896
amritha
- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

-விளம்பரம்-

அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை, செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. இதனால் தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியும் விரைவில் துவங்க இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயர் பிக் பாஸில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் அமிர்தா லைவ் சாட்டில் வந்த போது ரசிகர் ஒருவர் ‘நீங்க பிக் பாஸ் போவீங்களா ‘ என்று கேட்டிருந்தார் அதற்கு பதில் அளித்த அமிர்தா ‘தெரியல சஸ்பென்ஸ்ஸாவே இருக்கட்டும்’ என்று கூறியுள்ளார்.

அமிர்தாவின் இந்த பதிலால் ரசிகர்கள் குழம்பி போய்யுள்ளனர். இதுவரை பிக் பாஸ் 4, தமிழில் எப்போது துவங்கும் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் செப்டம்பர் இறுதி வாரத்தில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ் பிக் பாஸ் 4 துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒன்று செப்டம்பர் 27 அலல்து அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement