பிக் பாஸின் முதல் வாரத்திலேயே வெளியேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் சகோதரர்.

0
14681
sujitha
- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது தமிழில் கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.

-விளம்பரம்-
Vijay TV’s Pandian Stores fame's brother in Bigg Boss 4; actress shares pic ft Sujitha Dhanush, Surya Kiran

தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே தெலுங்கிலும் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்து உள்ளது. பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் முதல் சீசனை முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கி வந்தார். இரண்டாவது சீசனை நாணி தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால், முதல் சீசனை போல இரண்டாவது சீசன் வரவேற்பை பெறவில்லை இதனால் மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. மேலும், இந்த சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் நடிகர்கள், தொகுப்பாளர், யூடுயூப் பிரபலங்கள் என்று பலர் கலந்து கொண்டு உள்ளனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் நடித்து வரும் சுஜிதாவின் சகோதரர், சூர்யா கிரண் என்பவர் கலந்து கொண்டுஇருந்தார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் சுஜிதா.

நடிகர் சூர்யா கிரண், சிறு வயதில் இருந்தே பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்த காலத்தில் ரஜினி,கமல்,விஜயகாந்த்,அமிதாப் பச்சன் என கிட்டத்தட்ட 200+ படங்களுக்கு மேல் சிறு வயதிலேயே நடித்தவர் சுரேஷ்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் சிறு வயது ரஜினி தன்னுடைய தம்பியை வளர்க்கும் அந்த சிறு வயது ரஜினி கேரக்டரில் நடித்தவரும் சுரேஷ் தான். சமீபத்தில் இவர் தெலுங்கு பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்டார். ஆனால், முதல் வாரத்திலேயே இவர் எலிமினேட் ஆகியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement