பிக் பாஸ் 4-ன் Unseen வீடியோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு – எப்போது முதல் தெரியுமா ?

0
1205
BB
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியை எண்டிமால் என்ற நிறுவனம் தான் தயாரித்தது. சர்வதேச அளவில் பெரிய தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் விளங்கும் நிறுவனம் என்டமோல் ஷைன் . கடந்த 2014ஆம் ஆண்டில் என்டமோல் மற்றும் ஷைன் இரண்டும் இணைந்து என்டமோல் ஷைன் என்று அழைக்கப்பட்டது.  இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 79 நாடுகளில் இந்த நிறுவனம் 800 தயாரிப்புகளை கொடுத்துள்ளது.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார் ஆரி.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி முதல் மதியம் 2.30 ம்,மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ஆனால், இந்த சீஸனின் Unseen வீடியோ மட்டும் ஒளிபரப்ப இருக்கிறாரகலாம். இது ஒருபுறம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி என்டிமால் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாம். எனவே, இனி வரும் 6 சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும். ஒருவேளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு பதிலாக வேறு யாரவது வரலாம். அதே போல பிக் பாஸின் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement