என்னங்கடா, WWE கேர்ள்ஸ் எல்லாம் பிக் பாஸ்க்கு கூட்டினு வந்திருக்கீங்க – முதல் நாளே வச்சி செய்யும் நெட்டிசன்கள். வைரலான மீம்ஸ்கள்.

0
1249
bb
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நேற்று மாலை கோலாகலமாக துவங்கியது கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

-விளம்பரம்-

மீதமுள்ள பல போட்டியாளர்கள் யார் என்பதே தெரியவில்லை. அதிலும் இந்த சீசனில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இறக்கின்றனர். ராஜு ஜெயமோகன் அபிஷேக், அபிநய், வருண், இமான் அண்ணாச்சி அண்ணாச்சி, சிபி, நிரூப் என்று 7 ஆண் போட்டியாளர்களும் இசைவாணி, மதுமிதா ,பிரியங்கா, பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சங், ஸ்ருதி, அக்ஷரா ரெட்டி, ஐகி பெர்ரி, தாமரைச்செல்வி என்று 10 பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

- Advertisement -

மேலும், தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் முதல் திருநங்கையாக நமிதா மாரிமுத்து என்ற ஒரு திருநங்கை போட்டியாளரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக பிக் பாஸ் சீசன் என்றால் பெண் போட்டியாளர்களை விட ஆண் போட்டியாளர்கள் தான் அதிகம் இருப்பார்கள் ஆனால் இந்த சீசனில் பெண் போட்டியாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக முதல் நாளில் 15 அல்லது 16 போட்டியாளர்களை தான் அறிமுகம் செய்வார்கள். ஆனால், இந்த சீசனில் முதல் நாளே 18 போட்டியாளர்களை களமிறக்கிவிட்டுள்ளனர். இதனால் வைல்டு கார்டு போட்டியாளர்களாக இன்னும் எத்தனை பேர் களமிறங்குவார்கள் என்பது தெரியவில்லை. அப்படி என்றால் இந்த சீசனும் 105 நாட்களுக்கு மேல் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

என்ன தான் ஒரே நாளில் 18 போட்டியாளர்களை இறங்கினாலும் இதில் இருக்கும் பெரும்பாலான பேர் யார் என்பது கூட ரசிகர்களுக்கு தெரியாது அதேபோல 18 போட்டியாளர்களில் பத்து பெண் போட்டியாளர்கள் இருந்தாலும் லாஸ்லியா ஓவியா போன்ற இளசுகளை கவரும் வகையிலான போட்டியாளர்கள் இந்தமுறை இல்லை என்பதே ரசிகர்களின் வருத்தம்.

அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண் போட்டியாளர்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள் இவர்கள் அனைவருமே தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் அன்னியமாக தான் தெரிகிறார்கள் இதனாலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் பெண் போட்டியாளர்களை அங்கமாக கலாய்த்து வருகிறார்கள் இது என்ன அனைவரையும் WWEல இருந்து கூட்டிட்டு வந்தீங்களா என்றெல்லாம் கலாய்த்த்து வருகின்றனர்.

Advertisement