40 வயதில் துவங்கிய வாழ்க்கை, செல்ல மகள் – இமான் அண்ணாச்சியின் எளிமையான குடும்பம்.

0
2530
imman
- Advertisement -

பல மாதங்கள் காத்திருந்த மக்களின் எதிர்பார்ப்பு நேற்று மாலை பிரம்மாண்டமாக விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. என்னன்னு பாக்குறீங்களா? பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தாங்க. இந்தமுறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி புத்தம் புது பொலிவுடன் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. பிக் பாஸ் வீடு பசுமை வண்ணம் கான்செப்டில் உள்ளது. இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த முறை நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 யில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பல குழப்பத்தில் உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் 18 போட்டியாளர்களில் ஒருவராக இமான் அண்ணாச்சியும் பிக் பாஸ் வீட்டில் களம் இறங்கியுள்ளார். இமான் அண்ணாச்சியை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ என்ற வார்த்தையின் மூலம் தமிழக மக்களின் மத்தியில் இடம் பிடித்தவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் மட்டுமில்லாமல் நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் சென்னை காதல், தலைநகரம், வேட்டைக்காரன், நையாண்டி, கயல், மெட்ராஸ், பூஜை, புலி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்ணாச்சி அவர்கள் கமல்ஹாசனை ஆங்கரிங் செய்து அழகாக வரவேற்று அசத்தினார். பார்ப்பதற்கே அற்புதமாக இருந்தது. மேலும், இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறியது, எனக்கு 40 வயதுக்கு பின்னர் தான் வாழ்க்கையே துவங்கியது. நான் குட்டீஸ்களை கையால்வது போலவே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களையும் கையாளுவேன். பிக்பாஸ் வீட்டுக்குள் போனால் பெயர் கெட்டுப் போயிடும் எதுக்கு என்று பல பேர் சொன்னார்கள்.

அதிலும் சில பேர் அங்கே போனால் தங்களை யார் என்று புரிந்து கொள்ளலாம் என்று சொன்னார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயும் நான் எல்லோரையும் சிரிக்க வைப்பேன் என்று சொல்லி இருக்கிறார். போகப்போகத்தான் தெரியும் அண்ணாச்சி சிரிக்கவைக்க போகிறாரா? வெடிக்க வைக்க போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement