பிக் பாஸ் 5வில் உறுதியாகி இருக்கும் முதல் போட்டியாளர் - அதுவும் இந்த முன்னாள் போட்டியாளரின் மகள் தான்.

By Rajkumar · 4/9/2021

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த ஜனவரி மாதம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதியாகிவிட்டது.

இதையும் பாருங்க : கைவிட்ட கணவர், சொத்துக்கள் இருந்தும் அனாதையாக வாழும் கனகா வெளியிட்ட எமோஷனல் வீடியோ.

வரும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ப்ரோமோ கூட வெளியாகி இருந்தது. இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் பிரபல நடிகை ஷகீலாவின் தத்து மகளான மிளா கலந்துகொள்ள இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த சீசனில் நடிகை ஷகீலாவை கலந்துகொள்ளவைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது. நடிகை ஷகீலா கன்னடத்தில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதனால் அவர் இந்த சீசனில் கலந்துகொள்ளவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full