கைவிட்ட கணவர், சொத்துக்கள் இருந்தும் அனாதையாக வாழும் கனகா வெளியிட்ட எமோஷனல் வீடியோ.

0
23417
kanaga

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை.

Kanaka - What Happened in actress life ? Cancer or Death myths - Mollywood  Frames | Malayalam films, Latest Online Reviews

பல ஆண்டுகளாகவே நடிகை கனகா அவர்கள் தனிமையில் தான் வாழ்ந்து வந்தார். பல பிரச்னைகளினாலும், மன அழுத்தத்தினாலும் கனகா பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். அந்த வீடியோவில் நடிகை கனகா கூறியிருப்பது, எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.

இதையும் பாருங்க : நன்றாக சென்று கொண்டு இருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.

- Advertisement -

ஆனால், எனக்கு இப்போது 50 வயது கிட்ட ஆக இருப்பதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். நான் நடிப்பிலிருந்து விலகி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதனால் நான் மிகவும் பழையது. பத்து வருடங்களுக்குள் இருந்தால் மட்டும் தான் புதியது என்று சொல்வார்கள். நிறைய விஷயங்களை நானே ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இந்த வயதில் உனக்கு நடிக்க தேவையா? என்று சிலரும் கேட்பார்கள்.

அப்படி என்னை மீண்டும் நடிக்க அழைத்தால் எப்படி பேசவேண்டும், காஸ்ட்யூம், அழகு, எப்படி பழக வேண்டும் என பல விஷயங்களை இன்றைக்கு இருப்பது போல் நான் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இது குறித்து நீங்கள் என்ன விமர்சனங்களை சொன்னாலும் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை கனகா மீண்டும் நடிக்க வருவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

-விளம்பரம்-
Advertisement