குக்கு வித் கோமாளி பிரபலம் டூ சமீபத்தில் டாடா காட்டிய விஜய் டிவி சீரியல் நடிகை வரை – 5 போட்டியாளர்களின் விவரம்.

0
8236
bb
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் எந்தந்த பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று மக்கள் மத்தியில் ஆர்வமும் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பதிந்த வண்ணமும் உள்ளது. மேலும், சென்ற வருடமே பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய இரண்டு வாரம் குவாரண்டினில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால், இந்த முறை பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
ரச்சிதா

அது மட்டுமில்லாமல் கடந்த நான்கு சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனை நினைக்க வேண்டாம் என்றும், இதில் பல மாற்றங்களை கொண்டு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. காரணம் என்னவென்றால் இந்த ஆண்டு மாஸ்டர் செஃப், சர்வைவர் போன்ற பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதையெல்லாம் அடித்து நொறுக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க : காட்டுக்குள் ட்ரெக்கிங், பிகினி உடையில் சர்பிங் – வெளிநாட்டில் செட்டில் ஆகி என்ஜாய் பண்ணும் பிரகதி.

- Advertisement -

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்தெந்த போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் குறித்து பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரபலமான பிரபலங்களை தேர்வு செய்வார்கள். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனி, திரு, புகழ் மற்றும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரக்ஷிதா உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர் பரவி வருகிறது. இவர்களை தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சிக்கு ஜோடியாக நடித்த இர்பானையும் போட்டியாளராக களம் இறக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இர்ப்பான் இது குறித்து எந்த ஒரு பதிலையும் சொல்லவில்லை.

நடிகை ஷகிலாவின் மகள்

அதுமட்டுமில்லாமல் இவர் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல துறைகளில் இருந்தும், சமூக வலைத் தளங்களில் இருந்தும் பல பேர்களை தேர்வு செய்வார்கள். அந்த வகையில் டிக் டாக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாவின் நண்பர் ஒருவர் தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
சாந்தினி

இதனைத் தொடர்ந்து மற்ற சேனல்களில் இருந்து நடிகை சாந்தினி போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் இவர் ஜீ தமிழில் நடித்து வரும் இரட்டை ரோஜா சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி வருவதால் இவர் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களில் கண்டிப்பாக சிம்புவின் சிபாரிசு இருக்கும் என்று ஒருபக்கம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிம்புவோட சிபாரிசில் யார் வரப்போகிறார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இவர்களை தொடர்ந்து ஜி பி முத்து, ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, சூசன், வடிவுகரசி, ரமேஷ்கண்ணா, நடிகை சகிலாவின் மகள், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்று பல பிரபலங்களின் பெயர்கள் பட்டியலில் நீண்ட வண்ணம் உள்ளது.

Advertisement