விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த 3 ஆம் தேதி துவங்கியது. இந்த சீசனில் 7 ஆண் போட்டியாளர்களும் 10 பெண் போட்டியாளர்களும் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை ஒருவர் கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் துவங்கிய முதல் நாளே முதல் டாஸ்க்காக கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து பேசியது பலரை கண் கலங்க வைத்தது. சிறுவயதிலேயே தனக்கு பெண் தன்மை இருப்பதை உணர்ந்த நமிதா பெண்ணாக மாற ஆசைப்பட்ட உள்ளார் ஆனால் அதை பெற்றோர்கள் ஏற்க மறுத்து இருக்கிறார்கள் இதனால் பலமுறை அவரை அடித்து சித்திரவதை செய்திருக்கிறார்கள் மேலும் இவரை மறுவாழ்வு மையத்தில் கூட சேர்த்து இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : கணவரின் நெருங்கிய நண்பரோடு இரண்டாம் திருமணம்,இதை பற்றி ஏன் பவானி பேசவே இல்லை. வீடியோ இதோ.

Advertisement

ஒரு கட்டத்தில் இவரை கொலையோ செய்து விடுவதாக கூட கூறி இருக்கிறார்கள். ஆனாலும் இவர் பெண்ணாக வாழவே ஆசைப்பட்டு இருக்கிறார் எவ்வளவோ கஷ்டங்களை கடந்து 18 வயது ஆகும் வரை காத்திருந்த இவர் பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்து நீதிமன்றத்தில் இனி சுதந்திரமாக வாழலாம் என்ற தீர்ப்பையும் பெற்றிருக்கிறார் அதன் பின்னர் தனியாக வாழ்ந்து பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னை ஒரு திருநங்கை மாடலாக நிலை நிறுத்தியிருக்கிறார் நமிதா.

மேலும், இவருக்கு பல திருநங்கைகள் உதவி செய்திருக்கிறார்கள். மேலும், தங்களுக்கு திருநங்கை என்று அழகான பெயர் கொடுத்தது கலைஞர் ஐயா தான் என்று உருக்கமாக பேசி இருந்தார் நமிதா. இந்த குறிப்பிட்ட வீடியோவை கலைஞர் தொலைக்காட்சியே தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர்.

Advertisement
Advertisement