ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நேற்று மாலை கோலாகலமாக துவங்கியது கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.
அந்த வகையில் பவானி ரெட்டியும் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு நடிகை தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர் பவானி ரெட்டி மேலும் இவர் பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார் இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தியை தொடரில் நடித்து இருந்தார் அதன் பின்னர் இவரை வேறு எந்த சீரியலிலும் காண முடியவில்லை.
இப்படி ஒரு நிலையில்தான் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். பவானிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. திருமணமாந 8 மாதத்தில் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.
பிக் பாஸ் வீட்டில் இவர் கடந்த சில தினங்களாகவே தன்னுடைய இறந்துபோன கணவர் குறித்து தான் அடிக்கடி உருக்கமாக பேசி வருகிறார். தன்னுடைய கணவரின் நினைவில் இருந்து மீள முடியவில்லை என்றும் அவர் இறந்தபின்னர் வேறு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள விருப்பம் இல்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், இவர் ஏற்கனவே தன்னுடைய இரண்டாம் திருமணம் பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் ஆள் அட்ரஸ் இல்லாமல் இருக்கும் நதியா – அவருக்கு இவ்ளோ பெரிய மகள்களா.
அதில், ஆனந்த் என்பவரை தான் இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதாகவும் அவரும் மீடியா துறையை சார்ந்தவர் தான் என்றும் தனக்கும் தன்னுடைய கணவருக்கும் ஆனந்த் மிகவும் நெருங்கிய நண்பர் என்றும் கூறியிருந்தார். அதேபோல இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். என்னுடைய அம்மா, அப்பா தான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள கேட்டார்கள். அதனால்தான் நானும் சம்மதித்தேன். இருப்பினும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள ஆறுமாதங்கள் யோசித்துதான் சம்மதம் தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.
இப்படி இருக்க ஆனந்த் பற்றி பவானி ரெட்டி ஏன் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசவில்லை என்பது தெரியவில்லை. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுக நாளில் இவர் குறித்த வீடியோவில் இவர் பேசிய போது, முதல் கணவர் மறைவிற்குப் பின்னர் தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைத்ததாகவும் ஆனால், அந்த வாழ்க்கையும் அமையவில்லை என்றும் கூறியிருந்தார். ஒருவேளை இவரது இரண்டாம் திருமணம் நடைபெறவில்லையோ என்ற கேள்வியும் எழுகிறது.