பிக் பாஸ் 5வில் மாஸ்டர் பட பிரபலம் - கமல் கிட்ட லோகேஷ் ரெக்கமன்ட் பண்ணி இருப்பாரோ.

By Rajkumar · 29/9/2021

மாஸ்டர் படத்தின் பிரபலம் ஒருவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியிருக்கின்றது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றது.

அந்தவகையில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. தமிழில் இந்த நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து தற்போது 5வது சீசன் தொடங்க உள்ளது. அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பல புரோமோக்கள் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன.

இதையும் பாருங்க : 'வாழை இலைல நக்கி குடிக்கிறவன் தானேடா நீ' - வெளியான கெளதம் மேனனின் Sneak Peek வீடியோ.

வழக்கம் போலவே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வந்துகொண்டிருக்கின்றன. அதோடு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு வரும் 3ஆம் தேதி பதில் கிடைத்து விடும்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜயின் மாணவராக நடித்த சிபி சந்திரன் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது கமல், விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் தான் இயக்கி வருகிறார். ஒரு வேலை சிபியை, லோகேஷ் லோகேஷ் ரெக்மன்ட் பண்ணி இருப்பாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

behindtalkies AMP · Quick view
View full