‘வாழை இலைல நக்கி குடிக்கிறவன் தானேடா நீ’ – வெளியான கெளதம் மேனனின் Sneak Peek வீடியோ.

0
14263
rudra
- Advertisement -

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலரும் நடித்து உள்ளார்கள். இரண்டாவது முறையாக மோகன் ஜி, ரிஷி இந்த படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய மோகன், என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் பாதிரியாக உள்ளார். அவர் திரௌபதி படம் பார்த்துவிட்டு இந்த பட கதையை எனக்கு கூறினார்.

-விளம்பரம்-

இது மாதிரி ஒரு படம் எடுக்க உனக்கு தைரியம் இருக்கிறதா? என்றும் கேட்டார். அதற்கு பிறகு தான் கிறிஸ்துவ மதத்தை எப்படி கார்ப்பரேட் மாதிரி மாற்றி வைத்துள்ளார்கள் என்று எனக்கு தெரிய வந்தது.தற்போது இருக்கும் காலகட்டத்தில் இந்து மதத்தை அழித்து விடுவேன் என்று ஒரு மேடை போட்டு பேசி கைத்தட்டு வாங்கி விடுகிறார்கள். அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய கார்ப்பரேட் அரசியல் இருக்கிறது என்பது பொது மக்களுக்கு தெரியாது என்று கூறி இருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் கௌதம் மேனன், ராதாரவி போன்ற பெரிய பிரபலங்கள் நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. அதிலும் குறிப்பாக கௌதம் மேனனுக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த படத்தின் கெளதம் மேனன் தொடர்பான ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் ரிச்சர்ட்டுக்கும் கெளதம் மேனனுக்கும் ஏதோ மோதல் காட்சி போல காண்பிக்கப்பட்டு இருக்கும் இந்த காட்சியில் ரிச்சர்ட், கௌதம் மேனனை ‘உன்ன நம்பி பின்னாடி வரும் பசங்கள அமாவாசைக்கும் கிடைக்கும் பிரியாணி சாப்பிட வச்சிட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வாழை இலையில் வட பாயாசத்தை நக்கி குடிக்கிறவன் தானே நீ’ என்று கூறுகிறார். இதை வைத்து பார்க்கும் போது கெளதம் மேனனுக்கு இந்த படத்தில் ஒரு நெகடிவ் ரோல் தான் இருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

-விளம்பரம்-
Advertisement