தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதியாகிவிட்டது.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி என்டிமால் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாம். எனவே, இனி வரும் 6 சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும். அதே போல இந்த சீசனை சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதற்கான முன் பணத்தை அவர் எப்போதோ பெற்றுவிட்டார். பிக் பாஸின் ஐந்தாவது சீசன் ஜூன் மாதம் துவங்க இருப்பதாக ஆரம்பத்தில் தகவல் வெளியானது ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் 5 நிகழ்ச்சி வருகிற அக்டோ பர் மாதம் துவங்க இருக்கிறது. மேலும் , போட்டியாளர் அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி போடபட்ட பின்னரே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
Advertisement