பிக்பாஸ் 5க்கு பிரியங்கா செல்வது உறுதி – விஜய் டிவியே ஹிண்ட் கொடுத்திருக்காங்க பாருங்க.

0
1891
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்களும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் முழுவதும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளப்போகும் நபர்களை குறித்து தான் கருத்துக்கள் போய்க்கொண்டிருக்கின்றன.

-விளம்பரம்-
Start Music - Watch Episode 1 - Priyanka Serves Up a Joyride on Disney+  Hotstar

அந்த வகையில் தற்போது விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாகவும் அதற்கான ஒரு ஆதாரம் வெளிவந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான தொகுப்பாளினிகளில் பிரியங்காவும் ஒருவர். அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்றாலே போதும் பிரியங்கா பெயர் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார் பிரியங்கா.

இதையும் பாருங்க : அப்பா நகை கடை ஓனர், ஆனாலும் திருட்டு பழக்கம் – நடிகர் சூரி வீட்டில் நகை திருடிய திருடனை பற்றிய விசித்திர தகவல்.

- Advertisement -

இவர் தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களை மாகாபா உடன் இணைந்து தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும், கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் சீசன் 5ல் பிரியங்கா கலந்து கொள்ளப் போகிறார் என்று பல செய்திகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பிரியங்கா தொகுத்து வழங்கி சூப்பர் ஹிட்டான ஸ்டார் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தற்போது பிரியங்காவிற்கு பதிலாக மாகாபா தொகுத்து வழங்கியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போ கண்டிப்பா பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வார் என்று கமெண்ட் போட்டு வருகின்றார்கள். அதுமட்டும் இல்லாமல் ஸ்டார் மியூசிக் 3வது சீஸனில் முதல் போட்டியாளராக பாரதிகண்ணம்மா சீரியல் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், உண்மையிலேயே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கினால் தான் யார் வருவார்கள் என்று தெரியும்.

-விளம்பரம்-
Advertisement